லட்சகணக்கான சம்பளத்துடன் வெளியேறிய குயின்ஸி யாரை சந்தித்திருக்கிறார்? கசிந்த புகைப்படம்
நடிகை குயின்ஸி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ராபர்ட் மாஸ்டரை சந்தித்துள்ளார்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் ரசிகர்களின் கணிப்பு போல குயின்ஸி குறைந்த ஓட்களுடன் வெளியேறினார். அதற்கு முதல் வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.
ராபட் மாஸ்டருடன் குயின்ஸி
ராபட் மாஸ்டருக்கும், குயின்ஸிக்கும் இடையில் நல்ல ஒரு பந்த பிணைப்பு இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டரை குயின்ஸி தந்தை என்றே அழைத்து வந்தார்.
இந்த நிலையில் குயின்ஸி வெளியே சென்ற பிறகு ராபர்ட் மாஸ்டரை சந்தித்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
லட்சக்கணக்கில் சம்பளம்
இதேவேளை, பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 8 வாரம் தங்கி இருந்த குயின்ஸி ஒரு வாரத்திற்கு ரூ.1.4 லட்சம் என்று மொத்தம் 11 லட்சத்துக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் சம்பாதித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.