தனிஷ்க் நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளை! மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்தக் கொள்ளையில், கடையின் பின்புறம் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனிப்படைகள் அமைத்து விசாரணை
கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் இருந்த நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர்.
மேலும், கடை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடை ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தக் கொள்ளைச் சம்பவம், மதுரை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🚨 BREAKING | MAJOR GOLD HEIST IN MADURAI An estimated 15–20 kg of gold has reportedly gone missing from the #Tanishq jewellery showroom in #Madurai. Police say CCTV footage shows a lone suspect entering the building through the lift passage from the top floor. The robbery was reported late Wednesday night. More details awaited. @TanishqJewelry #TamilNadu #BreakingNews
— Ram M Sundaram (@ramsundaramTOI) November 12, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |