டிடிஎப் வாசன் கடையில் நடந்த திருட்டு! அவரே பதிவிட்ட காணொளி
புகழ்பெற்ற யூடியூபரான டிடிஎப் வாசன் சென்னையில் நடத்தி வரும் கடையில் கொள்ளையர்கள் பொருட்களை திருடிய சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைரல் வீடியோ
யூடியூபரான டிடிஎப் வாசன் இணையத்தில் பைக் ஓட்டி பிரபலமானவர். பைக்கில் பல சாகசங்களை செய்து அதன் மூலம் பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். இதற்காக இவருக்கு 47 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இதனால் இவருக்கு வந்த சர்ச்சைகளும் ஏராளமாக உள்ளது. இவர் சிறையில் அடைக்கப்பட்டும் இருக்கிறார். இந்த நிலையில் இவர் சினிமாவிலும் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இவரின் பல சர்ச்சைகள் காரணமாக படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள டிடிஎப் வாசனுக்கு சொந்தமான கடையில் திருட்டு நடந்துள்ளது. திருடர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விலையுயர்ந்த பொருட்களை திருடி உள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலபலப்பாகி வருகின்றது. கொள்ளையர்கள் திருடும் காட்சியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிஎப் வாசன், காசெல்லாம் பறிகொடுத்துட்டேன் என்று வடிவேலு பேசும் வசனத்தை பின்னணியில் ஒலிக்கவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |