நடுரோட்டில் காலுக்கு மேல் கால் போட்டு அலப்பறை செய்த போதை ஆசாமி.. - வைரலாகும் வீடியோ...!
நடுரோட்டில் காலுக்கு மேல் கால் போட்டு படுத்துக்கொண்டு அலப்பறை செய்த போதை ஆசாமியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அலப்பறை செய்த போதை ஆசாமி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்து மிகுந்த சாலையில், ஒரு போதை ஆசாமி, ஆபத்தான முறையில், ஒய்யாரமாக படுத்துக் கொண்டு அலப்பறை செய்து கொண்டிருந்தார். கார், பைக், பஸ், அந்த ரோட்டில் சென்றும்கூட அதையெல்லாம் கண்டுக்காமல் நடுரோட்டில் காலுக்குமேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொதுமக்கள் அவரை எழுப்பி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன கொடுமை சார்... இது... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்து மிகுந்த சாலையில், ஆபத்தான முறையில், ஒய்யாரமாக படுத்திருக்கும் போதை ஆசாமி....#திராவிட_மாடல் pic.twitter.com/icojkCL2iB
— Sevak Sathya (@Sevakofmata) March 10, 2023