ஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டான ரித்து சிறுவன்- வைரலாகும் அசத்தலான அடுத்த வீடியோ!
இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும், பலரும் வருமான நோக்கத்தோடு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவேற்று வருகின்றனர். ஒரு சிலர் பிரபலமடைய வேண்டும் என வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு.
அந்த வகையில், ரித்து ராக்ஸ் (Rithu Rocks) என்ற சேனலில் பதிவிட்ட ஒரு வீடியோ இரண்டே நாட்களில் 145K பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
மேலும், இதில் பதிவிடப்பட்டுள்ள பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்டர்ஸ் கலாட்டா என்ற வீடியோ மிகவும் பிரபலமடைந்து வைரலாகி வருகிறது.
நடித்து ரித்து என்ற சிறுவர் மிகவும் இயல்பாக பட்டையை கிளப்பியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். இதில் நடித்துள்ள சிறுவனின் வயது 7 ஆகும். தற்போது இவர்களின் வீடியோ காட்சியை வைத்து நெட்டிசன்கள் அசத்தலான ட்ரோல் காட்சியினை வெளியிட்டுள்ளனர்.