ஒரு சுழற்று சுழற்றிய பண்ட்.. நூலிழையில் தப்பிய தினேஷ் கார்த்திக்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்; வைரல் வீடியோ
ஐபிஎல் 14-வது சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணி மற்றும் டெல்லி அணி மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் டெல்லி அணி களத்தில் இறங்கியது.
முதலில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷிகர் தவான் முதலில் அதிரடியாக ஆடினாலும், தவறான ஷாட்டால் வெறும் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசி 24 ரன்களுக்கு அவுட்டானார்.
இதையடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னுடனும், ஹெட்மெயர் 4 ரன்னுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 9 ரன்னுடனும் , ஆவேஷ் ஐயர் 5 ரன்னுடனும், லலித் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து அனைவரும் அவுட்டாகி வெளியேறினர்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய கொல்கத்தா அணி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.
வெங்கடேஷ் ஐயர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய சுப்மான் கில் 33 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், பின்னர் வந்த ராணா மற்றும் சுனில் நரைன் நிலைத்து நின்று ஆடி கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தனர்.
சிறப்பாக ஆடிய ராணா 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார். சுனில் நரைனின் அதிரடியால் ஆட்டத்தின் 16-வது ஓவரில் கொல்கத்தா அணி 21 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.
அதிரடியாக ஆடிய சுனில் நரைன் 10 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டியின் போது, டெல்லி அணி பேட்டிங்கில் 17-வது ஓவரின் போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்துக் கொண்டிருக்க, வருண் சக்கரவர்த்தி பந்து வீசினார். வருண் சக்கரவர்த்தி கீழாக போட்ட ஒரு பந்தை ஓங்கி அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், பந்தை தொடக்கூட முடியாமல் தவறவிட்டார்.
அப்போது தான் பந்தை தவறவிட்ட நிலையில் பந்தை மீண்டும் அடிப்பதாக விளையாட்டுத் தனமாக பேட்டை சுழற்ற, அது பின்னால் நின்றுக் கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் ஹெல்மட்டை பதம் பார்த்திருக்கும்.
ஆனால், நூலிழையில் தினேஷ் கார்த்திக் தப்பினார் என்றே சொல்ல வேண்டும். இதைக் கண்ட வருண் சக்கரவர்த்தி ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
Rishabh Pant and Dinesh Karthik near miss ?
— Phoenix ?? (@Phoenix09004) September 28, 2021
? Credits : @DisneyPlusHS pic.twitter.com/WeHxKbZSyD