உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் ஆளுமை, காதல், பொருளாதாரம் மற்றும் குணாதிசயங்களில் தாக்கம் செலுத்துவதாகக் கூறப்படுகின்றது.
அந்த வகையில், சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசிக்காரர்கள் அழகு, வசீகரம், நேர்மை மற்றும் விசுவாசம் நிறைந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

குறிப்பாக, இவர்கள் ஒருவரை மனதார நேசித்துவிட்டால், எத்தனை தடைகள் வந்தாலும் அந்த உறவைக் கைவிடாமல் காப்பாற்ற முயற்சிப்பார்கள். இவர்களின் தனித்துவ குணங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசியினர் ஒருமுறை விலகினால்…
தங்களுடைய அன்புக்குரியவர்களுக்காகப் பல ஏமாற்றங்களையும் மனக்காயங்களையும் அமைதியாகச் சகித்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒரு ரிஷப ராசிக்காரரை உங்கள் வாழ்க்கையிலிருந்து இழந்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் இழந்தது ஒரு சாதாரண மனிதரை அல்ல; உங்களை எத்தனை முறை காயப்படுத்தினாலும், உங்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் தவித்த ஓர் உண்மையான அன்பை.

நீங்கள் பேசாமல் இருந்தபோதும் உங்களுக்காகக் காத்திருந்தார்கள். உதாசீனப்படுத்தியபோதும் உங்களை விட்டுக்கொடுக்கவில்லை. நீங்கள் அவர்களை மறந்த தருணங்களில்கூட, அவர்கள் உங்களை நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த அன்புக்கும் ஒரு எல்லை உண்டு.
ஒருநாள் ரிஷப ராசிக்காரர்கள் அமைதியாக விலகிச் சென்றுவிட்டால், அவர்களைத் திரும்ப பெறுவது நடக்காத காரியம். உங்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்ட அந்த உண்மையான மனதை நீங்களே இழந்துவிட்டீர்கள் என்பதை உணரும்போதுதான் அதன் வலி அதிகமாக இருக்கும்.

இவர்களை போல் நேசிப்பதற்கும், உண்மையாக இருப்பதற்கு வேறு ஒருவரை உங்களால் வாழ்நாளி்ல கண்டுப்பிடிக்கவே முடியாது. இதுவே ரிஷப ராசியினர் தனித்துவ சிறப்பு.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |