மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு என்ன?
மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாடகி பவதாரணி
பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வந்து அதற்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி சென்ற நிலையில் நேற்று மாலை 5.20 மணிக்கு மரணமடைந்த நிலையில், இன்று அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றது.
30க்கும் மேற்பட்ட படங்களில் பாடி திரையுலகினரையும் ரசிகரையும் கவர்ந்த நிலையில் இவரது மரணம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சொத்து மதிப்பு என்ன?
பவதாரணி உயிரிழந்த நிலையில் இவரது சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. இவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளதுடன், இவர் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.
தற்போது பாவதாரிணியின் சொத்து மதிப்பு 300 முதல் 350 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சிறு வயதிலேயே பின்னணி பாடகியாக மாறிய பவதாரிணி பாடல் பாடுவது மட்டுமில்லாமல், சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |