ரியோ குழந்தையோட கொடுத்த க்யூட் ரியக்சன்! இணையத்தில் கசிந்த புகைப்படம்.. குவியும் ரசிகர்களின் லைக்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் சொன்னது போலவே காட்டுக்கு சென்றுள்ள ரியோ ராஜ், அங்கே குழந்தையுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காடுகளுக்கு ட்ரிப் போவதை என்ஜாய் பண்ணும் ரியோ தற்போது குடும்பத்துடன் காட்டுக்கு சென்று எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
"காட்டுக்குப் போறோம்.. காட்டுக்குப் போறோம்.. சுத்தி பார்க்க போறோம்.. வண்டியை நிறுத்துங்க.. தேடி பார்ப்போம் அங்க" என சூச்சு சூச்சு டிவி எனும் குழந்தைகளுக்கான யூடியூப் சேனலில் வரும் தமிழ் ரைம்ஸ் பாடலை கேப்ஷனாக போட்டு, ரியோ ராஜ் தற்போது தனது மகள் ரிதியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களும் அன்பு கேங் நண்பர்களுமான கேபிரியல்லா மகளுடன் ரியோ இருக்கும் புகைப்படத்தை பார்த்து க்யூட்டு என கமெண்ட் செய்ய, அழகி குமாரு என அர்ச்சனா க்யூட்டாக கமெண்ட் போட்டுள்ளார். சன் மியூசிக் விஜே அஞ்சனாவும் ரியோவை வாழ்த்தி உள்ளார்.


