வீட்டுல எறும்புகள் தொல்லை அதிகமாக இருக்கின்றதா? ஓடஓட விரட்ட இதோ டிப்ஸ்
நம் வீடுகளில் சிகப்பு நிற எறும்புகள் அதிகமாகவே தொல்லை கொடுக்கும். அவற்றினை வீட்டில் இருக்கும் பொட்களை வைத்து எளிதில் எவ்வாறு விரட்டலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
சிகப்பு எறும்புகள் வீடுகளில் நுழைந்து உணவுப் பொருட்களை அனைத்தையும் சாப்பிட விடாமல் செய்து விடுகின்றது. இவை மனிதர்களை கடிக்கவும் செய்கின்றது.
இந்த கடி எறும்புகளால் தோல் சம்பந்தமான பிரச்சனையையும் நாம் சந்திக்க இருக்கின்றது. இதற்கான தீர்வினை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செய்து கொள்ளலாம்.
எறும்புகளை விரட்ட எளிய டிப்ஸ்
படிகாரம், மற்றும் மஞ்சள் இரண்டையும் சமஅளவு எடுத்துக் கொண்டு, இந்த பொடியை வீட்டில் எறும்பு இருக்கும் பகுதியில் தூவி விடவும்.
ஆரஞ்சு பழ சாறு சிறிது எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்நீரைச் சேர்த்து, எறும்பு இருக்கும் பகுதியில் தெளிக்கவும். இதற்கு எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்தலாம்.
எறும்பிற்கு பூண்டின் வாசனை பிடிக்கவே பிடிக்காது. ஆதலால் பூண்டு சாறை எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளித்தால் மாயமாக மறைந்துவிடும்.
வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து துடைத்தால், இவை எறும்பு விரட்டியாக இருக்கும்.
வினிகர் மற்றும் தண்ணீரை சமஅளவு எடுத்துக்கொண்டு எறும்பு இருக்கும் பகுதியில் தெளித்தால் எறும்பு தொந்தரவு இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |