அதிக சம்பளம் பெறும் பணக்காரர்களாக இருக்கும் டாப் 10 நடிகைகள்
தென்னிந்திய நடிகைகளில் அதிக சொத்து யார் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு பட்டியல் வெளியாகியிருக்கிறது. தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர்கள்.
இவ்வாறு சினிமாவிலும் மக்கள் மனதிலும் பிரபலமான நடிகைகள் பல கோடிகளில் சம்பளம் பெற்று சொத்து சேர்த்து டாப் இடங்களில் இருக்கும் நடிகைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பணக்கார நடிகைகள்
தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் பச்சனின் மொத்த சொத்து மதிப்பு 828 கோடி ரூபாயாம். மேலும் அவர் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்குவாராம்.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு 15 இலிருந்து 40 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்குகிறார். மேலும் இவரின் மொத்த சொத்து மதிப்பு 580 கோடியாகும்.
இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நடிகை தீபிகா படுகோனிடம் மொத்தம் 50 கோடிக்கு சொத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு படத்திற்கு 15 இலிருந்து 30 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குவாராம்.
நான்காவது இடத்தில் இருப்பவர் கரீனா கபூர். இவர் ஒரு படத்திற்கு 8 இலிருந்து 18 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 440 கோடி.
ஐந்தாவது இடத்தில் நடிகை அனுஷ்கா சர்மா. இவர் ஒரு படத்திற்கு 12 இலிருந்து 15 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குவார். இவரிடம் இருக்கும் மொத்த சொத்து 255 கோடி
ஆறாவது இடத்தில் நடிகை மாதுரி தீட்ஷிட் தான் இருக்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 250 கோடி எனவும் ஒரு படத்திற்கு 4 இலிருந்து 5 கோடிக்கு சம்பளம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஏழாவது இடத்தில் கத்ரீனா கைஃப் இருக்கிறார். இவர் 235 கோடிக்கு சொந்தகாரியாகவும் ஒரு படத்திற்கு 10 இலிருந்து 12 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறார்.
எட்டாவதாக நடிகை ஆலியா பட் இவரும் ஒரு படத்திற்கு 10 இலிருந்து 15 கோடிக்கு சம்பளம் வாங்கி மொத்த சொத்து மதிப்பாக 229 கோடி வைத்திருக்கிறார்.
ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரும் ஒரு படத்திற்கு 10 இலிருந்து 11 கோடிக்கு சம்பளம் வாங்கி மொத்த சொத்தாக 200 கோடி வைத்திருக்கிறார்.
பத்தாவது இடத்தில் இருப்பவர் நடிகை ஷ்ரத்தா கபூர் இவரின் மொத்த சொத்து 123 கோடி ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |