தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா? ரஜினி, விஜய்-லாம் இல்ல
தென்னிந்திய நடிகர்களில் அதிக சொத்து யார் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு பட்டியல் வெளியாகியிருக்கிறது.
தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி போன்றோர் பல கோடிகளில் சம்பளம் பெற்று சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்களாம்.
டாப்பில் இருக்கும் நடிகர்
ஆனால் இவர்களை எல்லாம் விட நடிகர் நாகர்ஜுனா அதிக சொத்துகளை வைத்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பானது கிட்டத்தட்ட 3000 கோடிக்கு இருக்குமாம்.
மேலும், அவர் ஒரு படத்திற்கு மாத்திரம் 9 கோடியிலிருந்து 20 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறாராம். விளம்பரங்களில் நடிப்பதற்கு தனியாக 2 கோடி வாங்குகிறார். இது தவிர இன்னும் ஏனைய பல வழிகளில் சம்பாதிக்கிறார்கள்.
ஏனையோர்கள் சம்பள விபரம்
2. நடிகர் வெங்கடேஷ் - சொத்துமதிப்பு 2200 கோடி
3. நடிகர் சிரஞ்சீவி - சொத்து மதிப்பு 1650 கோடி
4. நடிகர் ராம்சரண் - சொத்துமதிப்பு 1370 கோடி
5. ஜூனியர் என்.டி.ஆர் - சொத்து மதிப்பு 450 கோடி
6. நடிகர் விஜய் - சொத்து மதிப்பு 445 கோடி
7. நடிகர் ரஜினிகாந்த் - சொத்து மதிப்பு 430 கோடி
8. நடிகர் கமல்ஹாசன் - சொத்துமதிப்பு 388 கோடி
9. நடிகர் மோகன்லால் - சொத்து மதிப்பு 376 கோடி
ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகக் வட இந்திய சேனலான ஜூம் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |