ஏழை, பணக்காரர்கள் யாருக்கு வேணாலும் வரும்...ப்ரியா பவானி ஷங்கரின் நெஞ்சை உருக்கும் ட்வீட்
அண்மைக் காலமாகவே கொரோனா தொற்றினால் நடுத்தர வயதுடைய திரைத்துறையினர் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி ட்வீட் பதிவிட்டுள்ள நடிகை ப்ரியா பவானி ஷங்கர், “இது ஒருபோதும் நடந்திருக்க கூடாதென என்று நான் விரும்புகிறேன்.
அருண்ராஜா காரமாராஜ்க்கும் பலத்தையும் தைரியத்தையும் கொடுக்க கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
So disheartening.The sad message every departing life leave behind is,it could happen to anyone. You,me,our loved ones,rich,poor,ANYBODY! pls stay safe.
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 16, 2021
As much as I wish it never happened, I sincerely pray God to give strength and courage to @Arunrajakamaraj
மேலும் தமது பதிவில், “வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் வாழ்வை இழக்கும் சோகமான செய்தியாக இருக்கிறது. இதில் என்னவென்றால் இது யாருக்கும் ஏற்படக்கூடும்.
நீங்கள், நான், எங்கள் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், யாரும்! ப்ளீஸ் பாதுகாப்பாக இருங்கள்.” என அவர் பதிவிட்டுள்ளார்.