அரிசி கழுவும் தண்ணீரை முடிக்கு பயன்படுத்தினால் என்னவாகும்? தெரியாத ரகசியம் இதோ
இன்று பெரும்பாலான இல்லத்தரசிகள் அரிசி கழுவும் தண்ணீரை வெளியில் வீணாக கொட்டுகின்றனர். ஆனால் இவை முடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கின்றதாம்.
அரிசி நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளது. அரிசி கழுவிய நீரை முடிக்கு பயன்படுத்துவதால் மெலனின் உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன், முடி முன்கூட்டியே வயதாவதையும் தாமதப்படுத்துகின்றது.
அரிசியை நன்றாக கழுவிய பின்பு தண்ணீரில் 12 மணிநேரம் அறை வெப்பநிலையில், ஊறவைத்து, பின்பு தண்ணீரை மட்டும் வடிகட்டினால் புளித்த அரிசி கழுவிய தண்ணீர் தயார். இதனை ஸ்பிரே பாட்டில் ஒன்றில் வைத்து முடி மற்றும் சருமத்திற்கு பயன்படுத்தவும்.
அரிசி கழுவிய தண்ணீரின் நன்மைகள்
நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அரிசி நீரில் குறைந்த pH மதிப்பு மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. இவை முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கின்றது.
மேலும் நீண்ட முடியில் இருந்து சிக்கை எளிதில் அகற்ற உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற அலன்டோயின் உள்ளது. அத்துடன் புரோட்டீன்கள் முடி தண்டை வலுப்படுத்தவும், விரிசல்களை சரிசெய்யவும் உதவும்.
அரிசி நீர் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படுகின்றது. ஷாம்பு போட்ட பின்பு, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இயற்கையான சூழலில் உலர வைக்கவும், பின்னர் சாதாரண நீர் கொண்டு கழுவவும்.