“கொஞ்சமாவது யோசிச்சு இருக்கலாம்” ரேவதியின் வீழ்ச்சிக்கு இது தான் முக்கிய காரணம்!
நடிகை ரேவதியின் திரைத்துறை வீழ்ச்சிக்கு அவர் யோசிக்காமல் செய்த இந்த விடயம் தான் என சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
நடிகை ரேவதி
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. இவர் மண் வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போதைய காலக்கட்டத்தில் உச்சியில் இருந்தார். இவரது நளினத்திற்கும் சிரிப்பிற்குமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது.
மேலும், அப்போதைய காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த ரேவதி மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
2013ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
தற்போது இவர் பெரியளவில் திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அண்மையில் ஜோதிகாவுடன் ஜாக்பாட் திரைப்படத்தில் நடித்து நம்மை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
இது தான் காரணம்
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், ரேவதியின் வளர்ச்சி ஏன் தடைப்பட்டது? எனக் கேட்டத்தற்கு “மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே ரேவதி திருமணம் செய்துகொண்டார்.
அவரது திருமணமே அவரின் வளர்ச்சி தடைபட்டதற்கு முதல் காரணமாக இருந்தது. ஆனாலும் திருமண வாழ்க்கையிலும் அவருக்கு சரியான நிலை அமையவில்லை.
அதற்கு பின்னால் நடிப்புத் துறையில் முழு கவனத்தை செலுத்தாமல் டைரக்சன் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதுவும் அவர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியாததற்கு ஒரு காரணம்” என்று பதிலளித்திருந்தார்.