வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன் : இந்த 3 ராசிகளின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வியாபாரம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும்.
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் விளங்கும் புதன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது விரைவாக ராசிகளை மாற்றும் தன்மை உடையவர்.

தற்போது புதன் கடக ராசியில் வக்ர நிலையில் உள்ளார். இந்நிலையில், ஜூலை 7ஆம் தேதி அவர் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் வக்ர நிலையில் நுழைய இருக்கிறார்.
இந்த மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த பெயர்ச்சியால் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

புதன் பெயர்ச்சியால் மேஷ ராசியின் 3-ஆம் வீட்டில் புதன் செல்கிறார். இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
உங்கள் பேச்சுத் திறன் மூலம் பல வேலைகளை எளிதாகவும் வெற்றிகரமாகவும் முடிக்க முடியும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் மேலும் உயரும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தடைப்பட்ட வேலைகளும் மீண்டும் முன்னேறி நிறைவேறும்.உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
ரிஷபம்

புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியின் 2-ஆம் வீட்டில் புதன் செல்கிறார். இதனால் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் மீண்டும் கைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் விதமாக மாறும். இதன் மூலம் வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து நல்ல லாபம் பெற முடியும்.வியாபாரமும் விரிவடையும்.
மிதுனம்

புதன் பெயர்ச்சியால் மிதுன ராசியின் முதல் வீட்டில் புதன் செல்கிறார். இதனால் பல வழிகளிலும் சாதக நன்மைகள் கிடைக்கும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும், சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். ஊடகம் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படும்.
குறிப்பாக இதுவரையில் இருந்த குழப்ப நிலை மாறி சிந்தனையில் தெளிவு பிறக்கும். நிதி நிலையில் அரசு வளர்ச்சி உண்டாகும். புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |