viral video: நபரொருவரின் கையை பதம் பார்த்த ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு! பதறவைக்கும் காட்சி
ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு நபடிராருவரின் கையை கடித்து இறுக்கமாக பிடித்து வைத்திருக்கும் மிரள வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிள்றது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மலைப்பாம்பு இனமாக ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு அறியப்படுக்கிறது.
அவை 10 மீட்டருக்கும் (32 அடி) அதிகமான நீளத்தை எட்டக்கூடியவை மற்றும் மிகவும் சக்திவாய்ந்தவையாகும்.
இவ்வகை மலைப்பாம்புகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் தன்மை கொண்டவை தங்கள் இரையைச் சுற்றி இறுக்கம் கொடுத்து முறுக்கி நசுக்குவதால், சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் அல்லது மாரடைப்பு ஏற்பட்டு அவை இறக்கும்.
இந்த வகை மலைப்பாம்புகள் தங்கள் உணவை முழுவதுமாக விழுங்கும் திறன் கொண்டவை. மலைப்பாம்பின் தாடைகள் மிகவும் நெகிழ்வான தசைநார்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
என்வே பெரிய இரைகளைக் கூட முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு இதன் தாடை மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டதாக இருக்கும்.
இப்படி கொடூரமாக இரையை தாக்கக்கூடிய ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு நபடிராருவரின் கையை கடித்துக்கொண்டிருக்கும் காட்சி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |