ஈழத்தை குட்டி லண்டனாக மாற்றிய உணவகம்: சுற்றுலா சென்றால் நீங்களும் சுவைக்கலாம்!
பொதுவாகவே எம்மில் ஒருவர் மாதத்திற்கு இரு தடவைகள் சரி பேக்கை எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்ல தயாராகி விடுவார்கள்.
இவ்வாறு பயணிப்போர்கள் ஒரு புது வித அனுபவத்திற்காகவும் வேலைப்பளுவை எல்லாம் மறந்து சுற்றி உலா வருபவர்களுக்கு உணவு மிகவும் முக்கியமானது.
அவ்வாறு நீங்கள் புதிய உணவுகளை புதிய இடங்களில் ரசித்து சாப்பிட ஏற்ற இடம் தான் ஈழத்தில் இலண்டனில் உள்ள ஒரு உணவகத்தின் சாயலை ஒத்த உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
K Food என்று அழைக்கப்படும் இந்த உணவகம் கீரிமலை வீதியில், சண்டிலிப்பாய் சந்தியில் இருந்து 50 மீட்டர்கள் தூரத்தில் இடது பக்கமாக அமைந்துள்ளது.
இந்த உணவகம் 6 வருடங்களாக அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் புது புது மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர்.
இந்த உணவகம் குறித்து இன்னும் முழுமையான தகவல்களை சேகரித்து பயணங்களை ஆரம்பிக்க கீழுள்ள காணொளியைக் காணுங்கள்