Restaurant பாணியில் லெமன் சிக்கன் செய்யணுமா? ரெசிசிபி இதோ!
பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் பிடிக்கின்றது. சிக்கனை பல்வேறு விதங்களிலும் சுவையாக சமைக்க முடிவதே இதன் சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் லெமன் சிக்கனை ரெஸ்டூரண்ட் பாணியில் எவ்வாறு வீட்டிலேயே செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
அரைக்க தேவையானவை
நறுக்கிய வெங்காயம் - 1
பூண்ட - 5 பல்
நறுக்கிய இஞ்சி - 1 துண்டு
தண்ணீர் - கால் கப்
மேரினேட் செய்ய தேவையானவை
சிக்கன் - அரை கிலோ
தயிர் - 3 தே.கரண்டி
மஞ்சள் - அரை தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
எலுமிச்சைச்சாறு - 2 தே.கரண்டி
கடலை எண்ணெய் - 2 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி
நறுக்கிய குடைமிளகாய் - 1
பட்டர் - 2 தே.கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கால் கப் தண்ணீரில் ஊற்றி நல்ல பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் அரைத்து வைத்த விழுது மற்றும் மேரினேட் செய்ய தேவையான பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 20 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் மேரினேட் செய்யப்பட்ட சிக்கனைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் மூடி வைத்து வேகவிட வேண்டும்.
பின்னர் மூடியை திறந்துவிட்டு 5 நிமிடங்கள் வரையில் வேக வைகவிட்டு,அதில் கரம் மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் குடை மிளகாய் மற்றும் வெண்ணெயை சேர்த்து, சிக்கன் முழுவதும் நன்கு படும் வகையில் கிளறிவிட வேண்டும்.
இறுதியாக சிக்கனை இறக்குவதற்கு முன்னர் எலுமிச்சை சாறை கலந்து நன்கு கிளறிவிட்டால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் லெமன் சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |