12kg எடை குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பாக்கியலட்சுமி ராதிகா- அவரே சொன்ன விஷயம்
12 கிலோ வரை உடல் எடையை குறைத்த சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகை ரேஷ்மா
தமிழ் சினிமாவில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
இவர், கோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் சின்னத்திரையில் தான் அதிகமான சீரியல்கள் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது பிரபல தொலைக்காட்சியில பாக்கியலட்சுமி சீரியல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் போன்ற மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
12 kg வரை எடை குறைப்பு
இந்த நிலையில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவருடைய எடை குறைப்பு பயணம் குறித்து சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
அந்த வகையில், “என்னுடைய உடல் சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக திடீரென்று எடை கூடிவிட்டது. அதன் பின்னர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தேன். இதனால் என்னுடைய உடல் கிட்டத்தட்ட 12 கிலோ வரை தற்போது குறைந்துள்ளது.
படப்பிடிப்பு இல்லை என்றால் ஜிம்மில் தான் இருப்பேன். கடந்த 9 மாதங்களாக பல உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்து வருகிறேன். அதிலும் குறிப்பாக சர்க்கரை சாப்பிடுவதை குறைத்துள்ளேன். இதனால் என்னுடைய உடல் 12 கிலோ வரை குறைந்துள்ளது..” எனக் கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பலரும் உடற்பயிற்சி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |