Photo Album: கணவர், குழந்தை என குஷியாக வாழும் பிரியங்கா சோப்ரா- ரசிகர்களை கவரும் படங்கள்
கணவர், குழந்தை என குஷியாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை பிரியங்கா சோப்ரா
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதனை தொடர்ந்து பாலிவுட்டில் என்றி கொடுத்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர், பிரபல பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பிரியங்காவை விட 10 வயது சிறியவர் ஆவார். இந்த தம்பதிகளுக்கு தற்போது மகள் ஒருவரும் இருக்கிறார்.
குடும்பத்துடன் குஷியாக இருந்து வரும் பிரியங்கா கடைசியாக “சிட்டாடல்” என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி வேறு வகையிலும் இவர் வருமானத்தை குவித்து வருகின்றார்.
தனது இன்ஸ்டாகிராமில் ஏதேனும் பிராண்டின் விளம்பரம் போடுவதற்கு ஒரு போஸ்ட்க்கு மூன்று கோடி ரூபாய் வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பல வழிகளில் முன்னணியில் இருந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா கணவர் மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்களை தொடர்ந்து பதிவில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |