ரோகித்தை தூக்கிட்டு அவர போடுங்க... நிருபரின் கேள்வியால் விராட் கோலி கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?
இந்தியா பாகிஸ்தான் இடையேயான டி20 உலககோப்பை போட்டி நேற்று துபாயில் நடந்தது. இதில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று டி20 வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.
இந்த நிலையில், போட்டி நிறைவடைந்த பின்னர், இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதிலும், கேப்டன் கோலி சரியான முறையில் அணியை வழித்த தவறிவிட்டார் என கேள்விகள் எழுப்பபட்டன.
அதற்கு பதிலளித்த கோலி, பயிற்சி ஆட்டத்தில் மிகச்சிறப்பாக விளையாடிய இஷான் கிஷனை நீக்கிவிட்டு ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்த்துள்ளீர்கள்? அவர் இனி வரும் போட்டிகளில் நீக்கப்படுவாரா? என நிருபர் கேட்டனர்.
அதற்கு, உடனே ஷாக் ஆன கோலி, என்ன தெரிஞ்சு தான் பேசுறீங்களா? டி20 போட்டியில் அபாரமான ஆட்டக்காரர் ரோகித்தை நீக்க வேண்டுமா? என சிரித்து, அவர் நன்றாக விளையாடக்கூடியவர் இனி வரும் போட்டியில் பார்ப்பீர்கள் என கூறிவிட்டு, உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்றால் முதலில் என்னிடம் கூறி விடுங்கள்,...
அப்போது, தான் என்னாலையும், நீங்கள் நினைப்பது போலவே பதிலை கூறுவேன் என நக்கலடித்துள்ளார். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
https://t.co/5H0b8YCANI pic.twitter.com/LRzCkcc8Kw
— Jayesh (@jayeshvk16) October 24, 2021