தாஸ் பட நாயகி ரேணுகா மேனனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரலாகும் புகைப்படங்கள்
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் திரைப்படத்தின் நடிகை ரேணுகா மேனன் மகள்களுடன் இருக்கும் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை ரேணுகா மேனன்
தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் , அதிக ரசிகர்களை கொண்டவர். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் மலையாள படங்களில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பிப்ரவரி 14 படத்தில் பரத் உடன் இணைந்து நடித்தார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் இதுவாகும்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஜெயம் ரவியுடன் இணைந்து தாஸ் என்ற மற்றொரு தமிழ் படத்தில் நடித்தார்.
ஆர்யாவுடன் இணைந்து கலாப காதலன் படத்தில் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் சூரஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவை விட்டு விலகி கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது நடிகை ரேணுகா கலிபோர்னியாவில் நடனப்பள்ளி ஒன்றை நிறுவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமூக வலைதளத்தில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |