எண்ணெய் வடியும் சருமமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க
நாம் சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு. இதனடிப்படையில் பலர் இயற்கையாக இருக்கும் அழகுசாதப்பொருட்களை தேடுவது குறைவது அப்படியான பொருட்களில் ஒன்று தான் கற்றாழை.
இந்த ஜெல் வெயிலில் எரிந்த சருமத்தை குணப்படுத்தவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இதில் அழகிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.
இது சருமம் கூந்தல் என அனைத்திற்கும் நல்லதொரு ஆற்றலை வழங்கும். அந்த வகையில் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்
ஒவ்வொருவருக்கும் சருமம் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு சருமம் எண்ணெய் தன்மை வாய்ந்ததாக இருக்கும். இதற்கு கற்றாழை முழு தீர்வு தரும். இந்த கற்றாழையை வைத்து செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க், எண்ணெய் பசை சருமத்தில் சிறப்பாக வேலை செய்வதுடன், துளைகளை அடைத்து முகப்பருவை தடுக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
- கற்றாழை- 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 5, 6 சொட்டுகள்
முகத்தை நன்றாக கழுவிய பின்னர் ஒரு சுத்தமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாற்றை நன்கு கலந்து சுத்தமான முகம் மற்றும் கழுத்தில் தாராளமாக தடவவும்.
தோல் இறுக்கமாக உணரத் தொடங்கும் வரை அதை முழுமையாக உலர விடவும். பின்னர் முகத்தை ஈரளிப்பாக வைத்து விட்டு கொஞ்சம் மசாஜ் செய்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரம் மூன்று முறை செய்தால் முகம் பளிச்சென்று வரும். எலுமிச்சை வைட்டமின் சி இன் இயற்கையான மூலமாகும் மற்றும் பருக்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பளபளப்பான சரும நிறத்தை அளிக்கும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளது.
கற்றாழை சருமத்திற்கு நன்மை செய்யும் பல பண்புகளைக் கொண்டுள்ளது, இது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இல்லாமல் போவதுடன் சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |