அழகை கெடுக்கும் மருக்களால் அவதியா? எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ
உடம்பில் சில இடங்களில் காணப்படும் மருக்களை எவ்வாறு வீட்டு வைத்தியங்கள் முறையில் சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான நபர்கள் முகம், கை, கால்கள் இவற்றில் கருப்பு நிற மருக்கள் காணப்படுகின்றது. ஆனால் இவற்றினை போக்குவதற்கு தோல் மருத்துவர்களை சந்திக்கவும் செய்கின்றனர்.
ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து மருக்களை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பூண்டு மருக்களுக்கு எதிராகப் போராடும் அல்லிசின் என்ற பொருள் பூண்டில் நிறைந்துள்ள நிலையில், இதன் சாற்றை மருக்கள் மீது தடவினால் படிப்படியாக மருக்கள் உதிர்ந்துவிடுமாம்.
அன்னாசி: அன்னாசிப் பழத்தில் உள்ள என்சைம்கள் மருக்களைக் கரைத்து அழிக்கும் தன்மை கொண்டுள்ளதால், இதனை சில வாரங்களுக்கு தொடர்ந்து மருக்கள் மீது தடவலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர்: மருக்களை வேரோடு அகற்ற ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காட்டன் பஞ்சு அல்லது சுத்தமான துணியில் ஆப்பிள் சைடர் வினிகரை நனைத்து, மருக்களின் மீது ஒரு நாளைக்கு மூன்று முறை வைத்தால், மருக்கள் வேரோடு விழுந்துவிடுமாம்.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு: உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை இவற்றின் சாறை மருக்கள் மீது தேய்ப்பதால் நாளடைவில் உதிர்ந்துவிடுமாம்.
வெங்காயம் மற்றும் கற்றாழை: வெங்காயத்தின் மீது உப்பு தடவி, அதன் சாற்றை மருக்கள் மீது தடவி வரலாம். இதேபோல், கற்றாழை ஜெல்லையும் மரு உள்ள இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் நாளடைவில் மருக்கள் உதிர்ந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |