பாகற்காயில் கசப்பு சுவையை நீக்கணுமா? இந்த பொருட்களை சேர்த்து சமைங்க
பாகற்காய் சுவையில் கசப்புத்தன்மையை சேர்ந்தது. இதன் காரணமாக இதை பலரும் சாப்பிட விரும்புவதில்லை. பாகற்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதை தினமும் சாப்பிட்டால் உடலில் பல நோய்கள் அழிக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க இந்த பாகற்காய் மிகவும் உதவுகிறது.
இரத்த சக்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காயை தினமும் சாப்பிடுவது நல்லது. பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்கள் நீங்கும்.
இந்த பாகற்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஜிங்க் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
இவ்வளவு நன்மைகயள் கொண்ட பாகற்காயை அதன் சகப்பு சுவை காரணமாக ஊன் ஓதுக்கி வைக்க வேண்டும். இந்த கசப்பு சுவையை எப்படி நீக்குவது என்பதை பதிவில் பார்க்கலாம்.
பாகற்காயில் கசப்பு சுவையை நீங்குதல்
உப்பு | உப்பு உவர்ப்பு சுவையானது. எனவே நறுக்கிய பாகற்காயில் சிறிதளவு உப்பு சேர்த்து 15-20 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த ஓற வைத்த பாகற்காயை நன்றாக பிழிந்து, நல்ல தண்ணீரில் கழுவவும். இது பாகற்காய் கசப்பை 95 சதவீதம் நீக்குகிறது. இதனால் சமைத்த பின்னர் அது கசப்பாக இருக்காது. |
தயிர் | சமைப்பதற்கு முன்னர் நறுக்கிய பாகற்காயை ஒரு கிண்ண தயிரில் 20-30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதை சமைக்கும் போது வெளியே எடுத்து கழுவி சமைக்கவும். தயிர் பாகற்காய் கசப்பை குறைப்பது மட்டுமல்லாமல் அதை மென்மையாக்குகிறது இதனால் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். |
எலுமிச்சை சாறு | பாகற்காயை நறுக்கிய பிறகு அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து 15 நிமிடங்கள் அப்படியே விடவும். அடுத்து அதை தண்ணீரில் கழுவிய பின் வறுக்கலாம் அல்லது தொக்கு போல் செய்யலாம். எலுமிச்சை சாறு சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் பாகற்காய் வாசனையை சிறிது குறைக்கவும் உதவும். |
புளி | புளி இது கறியின் சுவையை மேம்படுத்த பய்னபடும். புளிப்பு சுவை பாகற்காயின் கசப்பை ஒரு சிறந்த முறையில் சமன் செய்யும். பாகற்காயை புளி நீரில் ஊறவைக்கலாம் அல்லது புளி விழுதை அதன் மேல் தடவலாம். 20-25 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு பாகற்காயை கழுவி சமைக்கவும். இதனால் பாகற்காய் தன் கசப்பு தன்மையை இழக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |