முழங்கை, மூட்டுகளில் இருக்கும் கருமை நீங்க வேண்டுமா? தயிருடன் இந்த ஒரு பொருள் போதும்
முழங்கையில் இருக்கும் கருமையை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எவ்வாறு மறைய வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்மில் பெரும்பாலான நபர்கள் முகத்திற்கு மட்டும் அதிக கவனம் செலுத்தும் நிலையில், முழங்கால் மற்றும் முழங்கைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
அதிலும் குட்டையான மற்றும் கட்ஸ் லீவ் ஆடைகள் அணிவதை இந்த காரணத்தினால் தடுக்கவும் செய்வோம்.
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இவற்றினை எவ்வாறு சுலபமாக நீக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டு வைத்தியம் என்ன?
கடுகு எண்ணெய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தினை பொலிவாக வைக்கின்றது. இதனை லேசாக சூடுபடுத்தி முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி மசாஜ் செய்யவும். இரவில் இதை செய்துவிட்டு மறுநாள் குளிர்ந்த நீரில் குளித்துவிடவும்.
கடுகை பொடியாக்கி அதனுடன் சிறிதளவு பசும்பால் சேர்த்து நன்கு குழைத்து அதை கை, கால் மூட்டுகளில் தடவி ஸ்க்ரப் போல் தேய்க்க வேண்டும். இதுவும் நல்ல பலனை அளிக்கும்.
கற்றாழையின் ஜெல் கை மற்றும் காலில் உள்ள கருமையை போக்க உதவுகின்றது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கொஞ்சம் கொஞ்சமான மறைவதைக் காணலாம்.
GETTY IMAGES
எலுமிச்சையில் உள்ள அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகின்றது. எலுமிச்சையுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து அதனை முழங்கை மற்றும் முழங்கால் இவற்றில் தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவவும். பின்பு வைட்டமின் ஈ ஆயிலை கொண்டு மசாஜ் செய்தால் கருமை நீங்குவதை அவதானிக்கலாம்.
தயிருடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போன்று எடுத்து அதனை முட்டிகளில் தடவி நன்கு காய விட வேண்டும். காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் நல்ல மாற்றத்தை பெறலாம்.
Image : Shutterstock
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |