ஆன்லைனில் இளைஞர் ஆர்டர் செய்த பொருள்... ஆனா வந்தது என்ன தெரியுமா?
இன்றைய நவீன உலகத்தில் எந்த ஒரு பொருளை வாங்கவும் விற்கவும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மிகவும் உதவுகிறது.
அந்த வகையில் தலைநகர் டெல்லியின் வசித்து வரும் விக்ரம் புரகோஹெய்ன், அமேசானில் விளையாடும் வகையில் ரிமோட் கார் ஒன்றை ஆசை ஆசையாய் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், அந்த பார்சலில் வந்ததோ 'பார்லே ஜி' பிஸ்கெட். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த விக்ரம் அதனை அப்படியே படம் பிடித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அமேசானில் ஆர்டர் செய்ததோ விளையாட்டு பொம்மை கார் - வந்ததோ 'பார்லே ஜி' பிஸ்கெட். இப்போது இந்த பிஸ்கெட்டுகளுக்காக நான் டீ தயார் செய்ய வேண்டி உள்ளது' என பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் பதிவானது பெருவாரியான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.