மருந்திற்காக மருத்துவரின் காலில் விழுந்த தாய்.... பரிதாபமாக உயிரிழந்த 24 வயது மகன்
இந்தியாவில் ரெமிடிசிவிர் மருந்துக்காக மருத்துவர் காலில் விழுந்த தாயின் மகன் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில், உலக நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி, சாவகாசமாக உதவிய நிலையில் இருந்த இந்தியா, தற்போது வீசி வரும் கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது.
15க்கும் மேற்பட்ட உலக நாடுகள், இந்தியாவுக்கு உதவி புரிய விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், போதுமான ஆக்சிஜன் இல்லாமல், ரெமிடெசிவிர் மருந்துகள் இல்லாமல் திணறுகிறது இந்தியா.
இந்த நிலையில், நொய்டாவில் வசித்து வரும் ரிங்கி தேவி என்பவரது 24 வயது மகன் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக, மருத்துவமனை நிர்வாகம் ரிங்கி தேவியை 'ரெமிடிசிவிர்' மருந்தை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டது.
இதனால் அங்கும் இங்கும் அழைந்த குறித்த தாய், தலைமை மருத்துவரின் காலில் விழுந்து கதறியுள்ளார். ஆனால் தலைமை மருத்துவ அதிகாரியோ, குறித்த மருந்திற்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், பெண்ணின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
மாலை 4 மணி வரை மருந்து கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் அலைந்து மருத்துவமனைக்கு வந்த ரிங்கிக்கு ஏமாற்றமே இருந்தது. ஆம் 4.30 மணிக்கு அவரது 24 வயது மகன் சிகிச்சை பலனின்றி குறித்த மருந்து இல்லாத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.