இழந்த பணத்தை வீட்டிற்கே கொண்டு வரும் பரிகாரம்.. தவறினால் கிடைக்காது!
ஒருவர் பணம் வேண்டும் என அவசரமாக வந்து கேட்கும் பொழுது, உங்களிடம் இருப்பதை கொடுத்து விட்டால் அது நல்லது.
ஆனால் நீங்கள் அவசரத்திற்கு உதவியது போன்று அவர்கள் திரும்ப கொடுக்கமாட்டார்கள்.
அப்படியான சமயங்கள் வாய் தகராறு, பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
நீங்கள் கொடுத்த பணத்தை எப்படியாவது திரும்ப பெற வேண்டும் என்றால் என்னென்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பரிகாரம்
கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராமல் இருந்தால் அதனை சில பரிகாரங்கள் செய்து திரும்பவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிகாரம் செய்யும் பொழுது வெளியாட்கள் யாரும் பார்க்கக் கூடாது. அதனை சரியாக செய்து விட்டால் நீங்கள் இழந்த பணம் உங்களை தேடி வரும்.

பரிகாரம் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் செய்யும் வேளை சுபமுகூர்த்த நாளாக இருக்க வேண்டும். அன்றைய நாளில் கோமதி சக்கரம் 11 என்ற எண்ணிக்கையில் எடுத்து, அதனை கங்கா ஜலத்தில் சுத்தம் செய்து கொள்ளவும்.
அதன் பின்னர் அரசமரத்தின் அருகில் அமர்ந்து கோமதி சக்கரத்தை எடுத்து கொள்ளவும். அரசமரத்தடியில் சற்று ஆழமாக ஒரு பள்ளத்தை நோண்டி அதற்குள் உள்ளே உங்கள் கையில் உள்ள கோமதி சக்கரத்தை வைக்கவும்.

அவ்வாறு வைக்கும் வேளையில், நீங்கள் பணத்தை வாங்க வேண்டிய நபரின் பெயரை சொல்லிக் கொண்டே வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து, 11 கோமதி சக்கரத்தை வைத்தால் 11 முறையும் அவரின் பெயரை உச்சரிக்க வேண்டும்.
எல்லாம் முடிந்த பின்னர் மண்ணை போட்டு மூடி விடவும். இந்த பரிகாரத்தை செய்த பின்னர் விரைவாக உங்களுடைய பணம் உங்களிடம் வந்து சேரும். இதனை காலை 10 மணிக்குள் செய்து விட வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).