முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினையா? இயற்கை முறையில் தீர்வு
பெண்களை பொருத்தவரையில் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகமாக காணப்படும்.
இதனால் என்னதான் நல்ல மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் குறுகிய நேரத்திலேயே முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும். இந்த பிரச்சினைக்கு இயற்கையான முறையிலேயே இலகுவில் தீர்வை பெறலாம்.
வாரத்திற்கு ஒருமுறையாவது கடலைமாவு மற்றும் பன்னீர் கலந்து ஒரு பேஸ் பேக் போட்டுக் கொள்வதன் மூலம் முகம் பொலிவு பெறுவதுடன் எண்ணெய் தன்மை கட்டுப்படுத்தப்படுகின்றது.
எண்ணெய் வழியும் முகத்துக்கு எலுமிச்சை சிறந்த பலனை கொடுக்கும். பொதுவாகவே எண்ணெய் தன்மையான சருமத்தை உடையவர்கள் தாங்கள் நாளாந்தம் பயன்படுத்தும் பேஸ் வாஸ் எலுமிச்சை கலந்ததாக இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்வது சிறந்தது.
ஐஸ் வாட்டர் பேஸ் வாஸ்
காலையில் எழுந்தவுடன் ஐஸ் வாட்டர் கொண்டு முகம் கழுவுவதன் மூலமும் முகத்தில் இருந்து வழியும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த முடியும்.
எண்ணெய் தன்மையான சருமத்தை உடையவர்கள் தங்களின் அழகுசாதன பொருட்களில் அல்லது பயன்படுத்தும் பேஸ் பேக்கில் பால் பொருட்களை தவிர்த்து கொள்வது சிறந்தது.
பன்னீர், சந்தனத்தூள் மற்றும் முல்தானிமெட்டி ஆகியவற்றை சம அளவு பசை போல் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுவதனால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |