அந்த கொரோனா மருந்தை கொடுங்க.. மருத்துவரின் காலில் விழுந்து நோயாளியின் உறவினர்! நெஞ்சை உருக்கிய புகைப்படம்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும், கள்ளச்சந்தையில் மருந்துகள் 15,000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினருக்கு ரெம்டெவிசிர் மருந்து கொடுங்கள் என நோயாளியின் உறவினர் ஒருவர் மருத்துவரின் காலில் விழுந்து கேட்ட சம்பவம் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா வைரஸ் அதிகமாக பரவ மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இங்கு உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரெம்டெவிசிர் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த மருந்தை வாங்க உறவினர்கள் தேடி அலைந்தும் எந்த மருந்து கடைகளிலும் கிடைக்கவில்லை.
இதனால், அரசு தலைமை மருத்துவர் ஒருவரின் காலில் விழுந்த நோயாளியின் உறவினர் பெண் ஒருவர் தனது உறவினருக்கு ரெம்டெவிசிர் மருந்து கொடுங்கள் என கெஞ்சிக் கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ரெம்டெவிசிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்றாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த மருந்து மிகப்பெரிய பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.
