எங்கள் வீட்டு பாத்ரூமிலும் தூங்கலாம்: அமெரிக்கா வீட்டில் ஹோம் டூர் செய்த நடிகை ரேகா
அமெரிக்காவில் உள்ள சகோதரி வீட்டை சுற்றிக் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கடலோர கவிதைகள் நாயகி ரேகா.
நடிகை ரேகா
1986ஆம் ஆண்டு தமிழில் சினிமாவில் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ரேகா.
இவர் இந்தப் படத்தில் டீச்சராக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதற்குப்பிறகு ரேகா, புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டக்கரான், பாட்டுக்கு நான் அடிமை, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் குணா அண்ணாமலை பல படங்களில் நடித்திருந்தார்.
மேலும், புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமலுடன் நடித்த போது முத்தக்காட்சி ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது.
ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த ரேகா இறுதியில் ப்ளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இரு வாரங்கள் மட்டும் இருந்து விட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதற்குப் பிறகு சில சீரியல்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார்.
அமெரிக்காவில் ஹோம் டூர்
இந்நிலையில், தற்போது அமெரிக்காவிற்கு தனது சகோதரியின் நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த வீடு அவரைக் கவர்ந்திடவே அந்த வீட்டை ஹோம் டூர் செய்து வீடியோ பதிவு செய்திருக்கிறார்.
குறித்த வீடியோவில் முதலில் வெளியில் இருக்கும் சுற்றுச் சூழலையும், வெளியில் இருக்கும் பூந்தோட்டங்களையும் காட்டிவிட்டு வீட்டிற்குள் செல்கிறார்.
பிறகு வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு இடங்களையும் சுற்றிக் காட்டியிருக்கிறார். அவ்வாறு சுற்றிக் காட்டி விட்டு பாத்ரூமிற்கு சென்று அமர்ந்துக் கொண்டு இந்த வீட்டு பாத்ரூமில் கூட தங்கலாமாம்.
இன்னும் அந்த வீட்டில் இருக்கும் இடங்கள் எல்லாம் வீடியோவாக காட்டியிருக்கிறார். குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.