தவிக்கவிட்ட காதலி! 70 கிலோ உடல் எடையை குறைத்து வியக்க வைத்த இளைஞர்
காதலி பிரேக் அப் செய்ததால் ஒரே ஆண்டில் 70 கிலோ உடல் எடையை குறைத்து இளைஞர் ஒருவர் வியக்க வைத்துள்ளார்.
புவி என்ற இளைஞர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்குரிய நபராக வலம் வருகிறார். 144 கிலோ உடல் எடை கொண்ட அவர் காதலி உடல் எடை அதிகமாக இருக்கிறார் என பிரேக் அப் செய்து இருக்கிறார்.
இதனால், மனமுடைந்து, கடின முயற்சியுடன் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி 2021ஆம் ஆண்டு 144 கிலோ எடைக்கொண்ட அந்த இளைஞர் தற்போது ஒரே ஆண்டில் 70 கிலோ உடல் எடையை குறைத்து, வியக்க வைத்துள்ளார்.

மேலும், கடின உணவு முயற்சி, கோபம் என அனைத்தையும் கொண்டு இதனை நிகழ்த்தி இருக்கிறார். இவரின் முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரின் இன்ஸ்டா பதிவுலும், டிக்டாக்கில் வெளியிட்டு இருக்கிறார். அன்று நிராகரிக்கப்பட்ட காதல் தற்போது இவருக்கு பல ப்ரபோஸ்கள் வலம் வருகிறதாம்.