மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா... வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை ரெஜினா கசாண்ட்ரா இதுவரையில் இல்லாத அளவுக்கு செம ஹொட் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரெஜினா கசாண்ட்ரா
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் ரெஜினா கசாண்ட்ரா. இவர் தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தாலும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.
ஹிந்தியில் சோனம் கபூருடன் இவர் இணைந்து நடித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ ஐசா லகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். குறித்த திரைப்படம் ஓரினச்சேர்க்கை கதையை மையப்படுத்தி இருந்தமையால் சர்ச்சைக்கு உள்ளானது.
அதனை தொடர்ந்து அவரது கரியரில் உச்சபட்சமாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ரெஜினா தற்போது இதுவரையில் இல்லாத அளவுக்கு ட்ரெண்டிங் உடையில் உச்சகட்ட கிளாமர் காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
