பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்... 20 வயதில் ரெஜினாவிற்கு நடந்தது என்ன?
தமிழில் தனது 15 வயதில் கண்ட நாள் முதல் படத்தில் கடந்த 2005ம் ஆண்டில் அறிமுகமானவர் தான் நடிகை ரெஜினா.. பின்பு சில தமிழ் படங்களில் நடித்த இவருக்கு 2013ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் இவரை மிகப்பிரலமாக்கியதோடு, ரசிகர்களிடமும் கொண்டு சென்றது.
தற்போது தெலுங்கு சினிமாவில் படுபிஸியாக நடித்து வரும் இவர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ரெஜினாவிடம் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கேட்ட கேள்விக்கு அவர் தனது வாழ்வில் நடந்த உண்மையை பதிலாக அளித்துள்ளார். இந்த மாதிரியான சம்பவம் என் வாழ்விலும் நடைபெற்றுள்ளது. எனக்கு ஒருவர் போன் செய்து பேசிக்கொண்டு இருக்கும் போது ‘அட்ஜெஸ்ட்மண்ட்’ செய்ய வேண்டும் என்று கூறினார்.
அப்பொழுது தனக்கு வயது 20 இருக்கும். அதுகுறித்து எதுவும் தெரியாததால் என் மேனேஜர் அதை பற்றி பேசுவார் என்று கூறினேன். பின்னர் தான் தெரிந்தது, அவர் சொன்ன ‘அட்ஜெஸ்ட்மண்ட்’ என்ற வார்த்தையின் அர்த்தம் உடனே போனை கட் செய்துவிட்டேன். அதன் பின்னர் போனை என் வாழ்வில் அது போன்ற நிகழ்வை சந்தித்து இல்லை.
சினிமா துறையை விடுங்கள் இதுபோன்ற அணிதிகழ் பல்வேறு துறைகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் கேட்டால் கூட அவர்கள் சொல்ல ஒரு கதை இருக்கும் இதுபோன்ற உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.