மாதவிடாய் வலிக்கு Regestrone மாத்திரைகள்
ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது அதீத ரத்தப்போக்கு, மாதவிடாய் வலிகளுக்கு மருந்தாகிறது Regestrone 5mg மாத்திரைகள்.
இதில் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோனான progesterone நிறைந்திருக்கிறது.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் Regestrone மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவரின் அறிவுரைப்படி அவர் கூறிய அளவுகளில் மற்றும் நாட்களில் மட்டுமே எடுத்துக் கொள்ளவும், தண்ணீருடன் முழுமையாக மாத்திரைகளை விழுங்கவும்.
Shutterstock
கடித்தோ. மென்றோ சாப்பிட வேண்டாம்.
பக்கவிளைவுகள்
தலைவலி
குமட்டல்
வயிற்றில் வலி
மயக்கம்
மார்பகத்தில் அசௌகரியம்
பிறப்புறுப்பில் புள்ளிகள்
பக்கவிளைவுகள் தீவிரமானதாக இருந்தாலோ, இன்னும் பிற தொந்தரவுகள் இருந்தாலோ மருத்துவரை அணுகவும்.
மஞ்சள்காமாலை, மைக்ரேன் மற்றும் பேசுவதில் குளறுபடி, உணர்ச்சிகள் இல்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும், இது ஆபத்தானதாக இருக்கலாம்.
கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும், உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தாலும் Regestrone மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
கல்லீரல் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மைக்ரேன் தொந்தரவு இருப்பவர்கள் Regestrone மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது.
இதுதவிர வேறு ஏதேனும் நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
ரத்த மற்றும் சிறுநீரக பரிசோதனையில் Regestrone மாத்திரைகள் மாறுபாடுகளை உண்டு பண்ணும் என்பதாலும் கவனமாக இருக்கவும்.
Regestrone மாத்திரைகள் பயன்படுத்தும் போது ஆல்கஹால் எடுப்பதை தவிர்க்கவும், வண்டிகளையும் இயக்கக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |