Reecha Food Festival: கோலாகலத்தின் உச்சியில் உணவுத் திருவிழா.. அலைமோதும் மக்கள்
இலங்கை பாரம்பரியத்தை பேணும் றீ(ச்)ஷா பண்ணையில் உணவுத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
உணவுத் திருவிழா
தமிழர்களின் உணவு மரபு எப்போதும் தனித்துவம் வாய்ந்தது. “உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, அறுசுவை உணவுகளை உண்ணும் பழக்கம் தமிழர்களின் வழக்கமாக உள்ளது.
இதன்படி, இலங்கையில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள் உலகிற்கு காட்டும் வகையில் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குள் றீ(ச்)ஷா ஏற்பாடு செய்த உணவுத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இலங்கை வாழ். மக்களின் கை பக்குவங்களை சுவை பார்ப்பதற்காக பெருந்திரளான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் அங்கு வந்திருந்தனர்.
மேலும், றீ(ச்)ஷா பண்ணையில் உணவுத் திருவிழா எப்படி நடந்து முடிந்துள்ளது என்பதை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |