குழந்தை பிறந்து 3 மாதத்தில் கிங்ஸ்லி மனைவி போட்ட குத்தாட்டம்- அதிகமாகும் பகிர்வு
குழந்தை பிறந்து 3 மாதத்தில் கிங்ஸ்லி மனைவி போட்ட குத்தாட்ட காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
கிங்ஸ்லி- சங்கீதா
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான 'கோலமாவு கோகிலா" என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
வைப் செய்கிறாரா?
இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு அழகான பெண் குழந்தையொன்று உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதா அவ்வப்போது குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம்.
அந்த வகையில், குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகவில்லை. இருந்தாலும் ட்ரெண்டிங் பாடலுக்கு வைப் செய்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியை அதிகமாக ஷேர் செய்யும் நெட்டிசன்கள், அவரின் நடனத்தை பாராட்டு வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |