குழந்தை பிறந்த பின்னரும் ஜோடியாக அசத்தும் ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா! குவியும் லைக்குகள்
பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் சீரியல் நடிகையுமான சங்கிதா ட்ரெண்டிங் உடையில் தனது காதல் கணவருடன் எடுத்துக்கொண்ட தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை ஆரம்பித்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக உயர்ந்துள்ளவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சினிமாவில் செம பிஸியாக இருக்கும் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து தனது 47 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார்.நடிகை சங்கீதாவுக்கு அப்போது வயது 44.
இந்த தம்பதிகளுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர்சூட்டும் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்தன.
இந்த தம்பதியினர் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். இந்நிலையில், தற்போது சங்கீதா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |