குழந்தையுடன் முதல் பொங்கல்... பாரம்பரிய முறையில் அசத்திய நடிகை சங்கீதா!
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கிதா தம்பதிகள் தங்களின் குழந்தையுடள் பாரம்பரிய முறையில் பெங்கல் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை ஆரம்பித்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக உயர்ந்துள்ளவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சினிமாவில் செம பிஸியாக இருக்கும் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து தனது 47 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். நடிகை சங்கீதாவுக்கு அப்போது வயது 44.

இந்த தம்பதிகளுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஒவ்வொரு விசேட நிகழ்வையும் இவர்கள் என்றும் மறக்காத பொக்கிஷ நினைவுகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள்.

அண்மையில் தங்களின் குழந்தையுடன் கொண்டாடிய முதல் நத்தார் பண்டிகையின் அழகிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், சங்கிதா தற்போது பாரம்பரிய முறையில், தனது குழந்தையுடன் முதல் பொங்கல் பண்டிகையை அசத்தலாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |