இறைச்சி அதிகமாக எடுத்துக்கொள்பவரா நீங்கள்? ஆபத்து ஜாக்கிரதை
புரதச்சத்து மட்டுமின்றி பல சத்துக்கள் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவாக இறைச்சி இருந்தாலும், இதில் பல தீமைகளும் ஏற்படுகின்றது. இங்கு சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினார் ஏற்படும் பிரச்சினையை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியத்திற்கு தீங்க விளைவிக்கும் சிகப்பு இறைச்சி
சிகப்பு இறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் கரோனரி இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் இந்த இறைச்சி எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தினை அளித்தாலும் இதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டுமாம்.
அதிக புரத உணவு, குறிப்பாக இறைச்சிகளில் இருந்து வரும் புரதம், கால்சியம் இழப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
விலங்கு புரதத்தை உட்கொள்வது, குறிப்பாக சிவப்பு இறைச்சி, இரத்தத்தை அமிலமாக்குகிறது மற்றும் எலும்புகளில் இருந்து கால்சியம் அகற்றப்படும்.