தனது எல்லைக்குள் பிரவேசித்த காட்டுப்பன்றிகளை ஒத்தையாக எதிர்த்த மான்... மிரளவைக்கும் காட்சி
சிவப்பு மான் தனது எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சி செய்த காட்டுப்பன்றிகளை துளியும் பயமின்றி ஒத்தையான மிரட்டிய மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்தக் காட்சிகள் சுவிட்சர்லாந்தின் ஜூரா மலைத்தொடரில், ஜெனீவாவிற்கும் லொசானேவிற்கும் இடையில், தோராயமாக 1,350 மீட்டர் (4,430 அடி) உயரத்தில் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாகவே சிவப்பு மான்கள் ஒரு இனமாக அல்லாமல் இனக்குழுவாக வாழக்கூடிய தன்மை கொண்டவையாகும்.
இவையும் மாடுகளை போல் உணவை அசைப்போடும் தன்மை கொண்டவையாகும். இந்த இனத்தின் ஆண் மானின் கொம்புகள் வருடந்தோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும் பொதுவாக வயது அதிகதிரிக்கும் போது ஆண் மான்களின் கொம்புகளில் காணப்படும் கிளைகளும் அதிகரிக்கும்.
கொம்பு விழுந்து விட்டால் இந்த மான் மற்ற விலங்குகளின் கண்களில் படாமல் காடுகளில் மறைந்து தான் வாழும்.
மான் இனத்துக்கு மானம் காக்கும் தன்மை மனிதர்களை விட சற்று அதிகமாகவே இருக்கும். பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் தன் உயிரை கொடுத்தாவது தனது கூட்டத்தை காக்கும் குணம் மான்களுக்கு உண்டு.
அதனை பறைசாற்றும் வகையில் தனது எல்லைக்குள் நுழைய முயற்சி செய்த காட்டு பன்றிகளின் கூட்டத்தை தனியாக நின்று எதிர்க்கும் ஒரு மானின் அசாத்திய தைரியத்தை காட்டும் காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |