காட்டிலிருந்து கடலுக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள்: காரணம் என்ன?
ஆஸ்திரேலியா நாட்டின் கிறிஸ்துமஸ் தீவில் சிவப்பு நண்டுகள் கடலுக்குள் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், மிகவும் அரிதான சிவப்பு நண்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம் என்பதால், இந்த சிவப்பு நண்டுகள் காட்டுப் பகுதியிலிருந்து கடலை நோக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளது.
ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு வெளியேறி, வழிப்பாதையில் அவர்களது துணையான பெண் நண்டுகளையும் சேர்த்துக்கொண்டு கடலுக்கு புறப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலுக்குச் சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளையிட்டு, முட்டைகள் பொறித்ததும், அவற்றிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து தங்கள் வீடான காடுகளை நோக்கி செல்கிறது.
ஒரு சிவப்பு நண்டு சுமார் ஒரு லட்சம் முட்டையிடும் நிலையில், இவற்றிலிருந்து வரும் குஞ்சுகள் மிகவும் குறைவாகவே காடுகளை நோக்கி வருகின்றது.
இதற்கு காரணம் குஞ்சுகளில் அதிகமானவை மீன்கள் போன்ற கடல் உயிரினங்களுக்கு உணவாகி விடுகின்றது. தற்போது நண்டுகளின் பாதுகாப்பிற்காக அந்நாட்டு அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
நண்டுகள் பாதுகாப்பாக கடலுக்கு செல்லவதற்காக, சுற்றுலா பயணிகளின் வாகனம் குறித்த சாலையில் செல்வதற்கு அனுமதி இல்லாமல், பாதையை அடைத்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளையும் சாலையோரமாக வாகனங்களை நிறுத்துமாறு கூறி, நண்டுகள் செல்வதை பார்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.