புகைபிடித்தல் பழக்கத்திற்கு இன்றுடன் தீர்வு- செவ்வாழை சாப்பிடுங்க
பொதுவாக இன்றைய நிலவரப்படி அணைவராலும் வாங்கிச் சாப்பிடக் கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான்.
இந்த பழம் மற்ற பழங்கள் போல் பருவத்திற்கு இல்லாமல் எல்ல காலங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். மனிதர்களுக்கு ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளை கொடுக்கின்றது.
வாழைப்பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சினை வராது என மக்களும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி வாழைப்பழம் தினமும் சாப்பிட்டால் எடை கூடி விடும் என்ற பயம் பலருக்கும் இருக்கும்.
மற்ற வாழைப்பழ வகைகளை விட செவ்வாழைப் பழங்கள் எடைக்குறைப்புக்கு உதவுவதாக சொல்லப்படுகின்றது.
அத்துடன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழங்களை விட செவ்வாழைப் பழத்தில் அதிகச் சத்துக்களும் உள்ளன.
இதன்படி, செவ்வாழையில், பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இதனை சாப்பிடும் ஒருவருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும் பிரச்சினை கட்டுபடுத்தப்படுகின்றது.
புகைப்பிடிப்பவர்களுக்கு உதவுமா?
மேலும், செவ்வாழைப் பழத்தைத் தினந்தோறும் உட்கொள்பவர்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயம் குறைவும் என்றும் கால்சியத்தை தக்க வைத்து எலும்பு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.
இவ்வளவு பலன்களை எமக்கு கொடுக்கும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டால் நிகோடின் பாதிப்பு கட்டுபடுத்தப்படுகின்றது.
இந்த நிலையில், சிலர் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் அதிகமான அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். இப்படியானவர்கள் பழக்கத்தை நிறுத்திய பின்னர் நிகோடினால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க செவ்வாழை சாப்பிடலாம். இதிலிருக்கும் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிகோடினால் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |