42 வயதில் த்ரிஷா கட்டுடலின் ரகசியம் - இந்த 7 பயிற்சிதான் காரணமாம்!
நடிகை த்ரிஷா உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க சாப்பாட மட்டுமல்லாமல் இந்த 7 உடற்பயிற்ச்சியம் கட்டாயம் செய்வாராம்.

நடிகை த்ரிஷா பிட்னஸ்
நடிகைகள் என்றால் அவர்கள் தங்கள் உடலை எப்போதும் பிட்டாக வைத்திருக்க தான் பார்ப்பார்கள். சிலர் இதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பார்கள்.
சிலர் ஜிம் சென்று உடலை கட்டுக்குள் வைத்திருப்பார்கள். அந்த வகையில் நடிகை த்ரிஷா தனது உடல் கட்டுப்பாட்டிற்கு உணவோடு சேர்த்து உடற்பயிற்ச்சியும் செய்கிறார். இதை பற்றி அவர் பேட்டி ஒன்றிலும் கூறி உள்ளார் அதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

7 உடற்பயிற்ச்சி
Kettlebell Squat : இந்த பயிற்ச்சி செய்தால் உடலின் தோள்பட்டை, கால்கள், உடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள தசைகள் ஆகியவை வலுப்பெற உதவும். இது தான் கட்டுடலின் முதல் இரகசியம்.
Bulgarian Split Squat: இந்த பயிற்ச்சி இடுப்புப் பகுதி தசைகளையும், கால்களையும் வலுப்படுத்த உதவும். பலரும் உடல் சமநிலையாக இருக்க இதை செய்வார்கள். இது உடலுக்கு பாதுகாப்பான மற்றும் சக்திவாய்ந்த பயிற்சியாகும்.
Standing High Cable Row: இந்த பயிற்ச்றி உயரத்தில் உள்ள கேபிளை நின்றவாறு மார்பை நோக்கி இழுப்பதாகும். இதன் மூலம் மேல் முதுகு மற்றும் தோள்பட்டை தசைகளை வலுப்பெறுகிறது.

Trap Bar Deadlift: உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் மிகச் சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று இது. இந்த பயிற்ச்சி உடலின் கீழ் பாதி வலிமையாக இருக்க செய்யப்படுகின்றது. இதனால் தசைகள் வலுவாகி கொழுப்புகள் படிவதை நிறுத்தி உடலுக்கு கட்டுக்கோப்பான அழகை கொடுக்கும்.
Bosu Ball Shoulder Press:இந்தப் பயிற்சியானது உடல் சமநிலையை மேம்படுத்துவதோடு, ஒரே நேரத்தில் பல தசைகளை வேலை செய்ய வைக்கிறது. இது தான் உங்கள் உடலின் பேலன்ஸ் ஐ மேம்படுத்த உதவும்.

Glute Bridge Machine: இந்த பயிற்ச்சி பகுதி தசைகளை வலுப்படுத்த உதவும். இது தசையை மட்டும் குறிவைத்து வேலை செய்வதால், அந்தத் தசைகள் விரைவாக வளர்ச்சியடைந்து நல்ல வடிவத்தைப் பெறும்.
Boxing Row (Finisher) :குத்துச்சண்டை வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முதுகுப் பயிற்சி தான் இது. இது தான் நாம் பார்ப்பதற்கு கம்பீரமான உடல் அழகை கொடுக்கும்.
நடிகை த்ரிஷா உணவு கட்டுப்பாட்டோடு இந்த பயிற்ச்சிகளையும் செய்வதன் மூலமாக தான் 42 வயதிலும் கொஞ்சம் கூட இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |