ஜீன்ஸ் பேண்ட்டில் இந்த சிறிய பட்டன்கள் இருக்க காரணம் என்ன?
ஜீன்ஸில் சிறிய அளவிலான பாக்கெட் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது எதற்காக இருக்கிறது என்பது இதுவரை யாரும் அறியாததாக இருக்கின்றது.
ஜீன்ஸ்
தற்போதும் சரி எப்போதும் ஃபேஷன் என்பது தொடர்ந்து மாறிவரும் ஒரு விடயம். இருப்பினும், சில காரணிகள் பல ஆண்டுகளாக சீரானவையாக இருப்பதில்லை.
பொதுவாக பெண்களின் ஆடைகளில் இருக்கும் பாக்கெட்டுகள் ஆண்களின் ஆடைகளில் உள்ள பாக்கட்டை விட சிறிதானவை. இது சிலருக்கு தெரிந்து இருக்கும் தெரியாமலும் இருக்கும்.
ஆனால் டெனிம் பேண்டுகளில் சிறிய பாக்கட்டுகளுடன் பட்டன்கள் இருக்கும். இதன் நோக்கம் என்ன என்று யாதைவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கான காரணம் தான் என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

சிறிய பாக்கட்டுகள்
ஜீன்ஸின் பாக்கெட்டுகளில் உள்ள பட்டன்கள் 1829 ஆம் ஆண்டு முதல் வர தொடங்கின. அந்த நேரத்தில் லெவியஸ் ஸ்ட்ராஸ் நிறுவனம் மற்றைய நிறுவனங்களை விட ஒப்பீட்டளவில் புதிய நிறுவனமாக இருந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் நாகரீகமான ஜீன்ஸ் அணிந்மதர்கள். அந்த காலகட்டத்தில், தொழிலாளர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய கால கட்டமாக இருந்தது.
மேலும் அவர்களில் பலர் தங்கள் பேன்ட் பாக்கெட்டுகள் கிழிந்ததாக புகார் தெரிவித்தனர். அதன்படி, லெவியஸ் நிறுவனத்தின் டெல்வ் ஜேக்கப் டேவிஸ், பாக்கெட்டின் ஓரத்தில் சிறிய உலோகத் துண்டுகளை வைத்து இந்த பிரச்சனையைத் தீர்த்தார்.

இந்த பட்டன்கள் ரிவெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை பாக்கெட்டை வலுப்படுத்த உருவாக்கப்பட்டன. இப்படி செய்வதால், பாக்கெட்டுகள் கிழியாமல் இருக்கும்.
எனவே ஜீன்ஸை வலுப்படுத்த இந்த ரிவெட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், டெய்லர் டெல்வ் ஜேக்கப் இதற்குப் பெருமை சேர்த்தார். மேலும் அவர் தனது பெயரில் இதற்கான காப்புரிமையை பெற ஆசைப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் போதுமான நிதி இருக்க வில்லை.
அதனால், 1872 ஆம் ஆண்டில், அவர் லூயிஸ் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த பிரச்சனையை விளக்கி, தனது கண்டுபிடிப்பு பற்றிய விவரங்களை கூறி இருந்தார்.

இதன் விளைவாக செப்பு பட்டன்கள் பின்னர் வைக்கப்பட்டன. மேலும் லூயிஸ் நிறுவனம் டெல்வ் ஜேக்கப்பை தங்கள் தயாரிப்பு மேலாளராக நியமித்தது. இதுதான் ஜீன்ஸ் பாக்கெட்டுகள் பட்டனுடன் வருவதற்கான காரணமாக காணப்படுகின்றது.
ஜீன்ஸில் சிறிய அளவிலான பாக்கெட் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள், இது பெரும்பாலும் பென் டிரைவ்கள் போன்ற பல்வேறு பொருட்களை சேமிக்க பயன்படுகிறது.
இது முதலில் பாக்கெட் கடிகாரத்தை வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாக்கெட் கடிகாரத்திற்கு வசதியாக பொருந்தும் அளவுக்கு சிறியதாக உருவாக்கப்பட்டது.

இப்போது, ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் உள்ள பட்டன்கள், சிறிய பாக்கெட்டுகள், ஜீன்ஸில் ஃபேஷன் ஆகியவை ஒரு ஃபேஷனாக மாறியுள்ளன.
ஜீன்ஸ் என்கிற ஆடை புழக்கத்தில் வருவதற்கும் மக்களின் தேவை முக்கிய காரணியாக இருந்தது. குறிப்பாக உழைக்கும் மக்களுக்கான தேவை ஜீன்ஸ் உடைக்கு அதிகம் இருந்துள்ளன .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |