நகசுத்தி வருவதற்கான காரணம் என்ன? இதை தெரிந்து கொள்ளுங்கள்
நம்மில் பலருக்கும் கைவிரல் அல்லது கால் விரல் ஓரங்களில் திடீர் என வீக்கம் ஏற்பட்டு கடுமையான வலி மற்றும் சீழ் பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். இதனை நகச்சுத்தி என்று அழைப்பார்கள். அப்படியாக, நகசுத்தி ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? இதற்கு தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
நகசுத்தி என்பது பொதுவாக பாக்டீரியா அல்லது ஹெர்பஸ் கிருமி தொற்றுகளால் நக கண்களில் வரக்கூடிய ஒரு வகை பாதிப்பாகும். நம்முடைய கைகளில் இருக்கக்கூடிய நகங்களை கடிக்கும் பொழுது எச்சலில் உள்ள கிருமிகள் நகத்தின் ஓரங்களில் இருக்கக்கூடிய சிறிய வெடிப்புகளுக்குள் நுழைந்து இந்த தொற்றை ஏற்படுகிறது.
கைகள் அல்லது கால்களை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்வது, சமையல் அல்லது துணி துவைக்கும் வேலைகளில் நீண்ட நேரம் ஈடுபடுபவர்களுக்கு இந்த கிருமி தொற்று எளிதாக வருகிறது.

அறிகுறிகள் என்ன:
நகத்தை சுற்றியுள்ள தோல் பகுதி திடீர் என சிவப்பாக வீங்குதல் நம்முடைய விரல்களை அசைக்கவே முடியாத அளவிற்கு கடுமையான வலி உண்டாகும்.
பாதிப்பு இன்னும் தீவிரமடையும் பொழுது நகத்தின் ஓரங்களில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சீழ் சேர்த்துக் கொள்ளுதல், சிலருக்கு விரலில் உள்ள நரம்பு வலி கை முழுவதும் பரவுதுடன் லேசான காய்ச்சல் ஆகியவை நகசுத்தி ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.
இதற்கான தீர்வு என்ன:
நகசுத்தி ஆரம்ப காலகட்டங்களில் இருந்தால் வீடுகளில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே நாம் சரி செய்து விடலாம். நகசுத்தி வந்த விரலில் ஒரு எலுமிச்சை பழத்தை உடைந்து அந்த பழத்திற்குள் விரலை சொருகி வைப்பது பாரம்பரியமாக கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு சிறந்த வழியாகும். இந்த எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கக்கூடியது.

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து பாதிக்கப்பட்டு வரலை 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். இது வீக்கத்தை குறைக்கும். ஆனால் உங்களுடைய நகசுத்தி இரண்டு, மூன்று நாட்களுக்கு மேலே நீடித்து வலி குறையாமல் இருக்கிறது,
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் நல்லது. அதை போல், நீரழிவு நோய் இருப்பவர்கள் கட்டாயம் வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பதோடு உடனடியாக மருத்துவர் அணுகவேண்டும். நாமே ஊசியால் குத்தி சீழை எடுக்க முயலக் கூடாது. அது நம்முடைய தொற்றை இன்னும் தீவிரமாக்கும்.