இரவில் உறங்கும் போது தசை பிடிப்பா? இந்த சத்து குறைபாடு தான் காரணம்
முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய தசைப்பிடிப்பு தற்போது வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் வருகின்றது.
இதற்கான காரணம் குறித்தும், சத்துக்குறைபாட்டை போக்கக்கூடிய உணவுகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் B12
கால் பிடிப்புகள் பிரச்சனை பொதுவாக வைட்டமின் B12 குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இந்த வலியை தவிர்க்க உணவில் வைட்டமின் B12 நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும்.
வைட்டமின் B12 குறிப்பாக மீன், கோழி மற்றும் முட்டைகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
மேலும் இலைக் காய்கறிகள், உலர் பழங்களான பிஸ்தா, பாதாம் மற்றும் பாலாடைக்கட்டி, பால் மற்றும் மோர் போன்ற பால் பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் B12 குறைபாட்டைப் போக்கலாம்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும் போது தசை பிடிப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பெரியவர்கள் தினமும் சுமார் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் B12-ஐ உட்கொள்ள வேண்டும், B12ஐ நமது உணவில் அன்றாடம் சேர்த்து வந்தால் உடல் தசைப்பிடிப்பில் இருந்து விடுபடலாம்.
B12 உணவுகள்
விலங்குகளின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளில் ஏராளமான வைட்டமின் B12 உள்ளது.
ஒரு கப் பாலில் 1.1 மைக்ரோகிராம் வைட்டமின் B12 உள்ளது.
சைவ உணவு அல்லது பிற தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றுபவர்களுக்கு விலங்கு அல்லாத உணவுகள் தேவைப்படுகின்றன, அதற்கு ஊட்டச்சத்து ஈஸ்ட் நல்லது.
மாட்டிறைச்சியில் வைட்டமின் B12-இல் நிறைந்துள்ளது. 190 கிராம் மாட்டிறைச்சியில் 467% வைட்டமின் B12 கிடைப்பதாக அமெரிக்க விவசாயத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தயிர் இனிய வரப்பிரசாதமாக விளங்குகிறது, தயிரில், அதிகளவு வைட்டமின் B12 அல்லது சயனோகோபாலமைன் உள்ளது.
ஒரு கப் சாதாரண தயிரில், 28 சதவீதம் அளவிற்கு வைட்டமின் B12 உள்ளது.
பால் சார்ந்த பொருட்களான சீஸ், பன்னீர் போன்றவைகளில் அதிகளவில் B12 வைட்டமின்கள் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |