சோம்பேறிகள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? எதிர்மறையான அறிகுறிகள் என்னென்ன...!
பொதுவாகவே பலரும் பல காரணங்களால் சோம்பேறிகளாகி வருகிறார்கள். இப்படியானவர்கள் காலை எழும்பியதில் இருந்து இரவு தூங்க செல்லும் வரைக்கும் எப்போது பார்த்தாலும் சோம்பேறிகளாகத் தான் இருப்பார்கள். ஆனால் இவர்கள் எப்போது வேலைகள் செய்வதை விட்டு சொகுசான வாழ்க்கையைத் தான் எதிர்பார்ப்பார்கள்.
ஒரு வேலையை எடுத்தால் கூட அந்த வேலையை ஆற போட்டு அந்த வேலையை வைத்தே நாளைக் கடத்தி விடுவார்கள். இவ்வாறு இருப்பவர்கள் சோம்பேறிகள் இல்லையாம் மாறாக இவர்களுக்கு என்னப் பிரச்சினைகள் தெரியுமா?
சோர்விற்கான அறிகுறிகள்
நீங்கள் தூங்கி எழுந்தவுடன் உங்கள் உடல் சோர்வாக இருப்பதை உணர்வீர்கள் இது உங்கள் அன்றாட வேலையையும் திட்டமிட்டு வைத்திருந்த வேலைகளையும் செய்ய முடியாமல் போராடுவீர்கள்.
சோர்வாக இருக்கும் போது நீங்கள் விரும்பி செய்யும் ஒரு வேலை கூட ஆர்வம் இல்லாத அளவிற்கு ஆக்கி விடும்.
தலைவலி, தசை வலி மற்றும் இரப்பை குடல் பிரச்சினைகள் போன்றவை உடல் சோர்விற்கான அறிகுறிகளாக இருக்கும். மேலும், இது மனநிலை மாற்றம், உடல் சோர்வு, மனசோர்வு, பதட்டம் என்பவற்றுக்கு வழிவகுக்கும்.
உங்களுக்கு அதிக சோர்வு இருக்கும் போது வேறு மன அழுத்தங்களில் இருந்து வெளிவர முடியாது. ஓய்வு நேரத்தில் கூட தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்துக் கொண்டிருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |